Saturday, December 18, 2010

"காத்திருப்பு...!"

மலரே...!
மகரந்தங்களை மறைக்கலாம்
மணத்தை என் செய்வாய்..?
இதழ்களைக் குவிக்கலாம்
நிறங்களை என் செய்வாய்..?
மொட்டுக்களைத் துளைக்கும்
வண்டல்ல என் மனம்...
மலரில் அமரும்
வண்ணத்துப்பூச்சி..!

காற்றைத் துழாவும்
நின் நறுமணம்...
காதல் விடு தூதெனக்கு...!
மடல் விரியும் இதழ்கள்...
என் விருந்துக்கான இலைகள்...!
நீண்டு வளரும் நின் மகரந்தம்...
நான் விரும்பும் உணவு...!

என் எடை சுமையல்ல,- சுகம்.
உதடுகள் குவித்து உறிஞ்சும்
மதுவில் என் மயக்கம்...!
உன் மடியில் தலை சாய்தல்
என் கிறக்கம்...!

கால்களால் உன் கன்னம் கிள்ள..
நளினமாய் நர்த்தனமிடுகிறாய்..!
என்னால் உன் வாழ்வு சிறக்கும்.
உன்னால் என் வாழ்வு பிறக்கும்.

மறுபடி மறுபடி உன்னிடமே
மண்டியிடுகிறேன்....!!
விடியல்களில் உன் முகம் பார்த்தே
விழிக்கிறேன்.
எட்டி இருப்பதாய் ஒரு
எண்ணம் ....
கொடியில் குடியிருக்கிறேன்....
மலரோடு குடித்தனம் நடத்த....!!

3 comments:

சுவடுகள் said...

* காற்றைத் துழாவும்
நின் நறுமணம்...
காதல் விடு தூதெனக்கு...!
மடல் விரியும் இதழ்கள்...
என் விருந்துக்கான இலைகள்...!
* கொடியில் குடியிருக்கிறேன்....
மலரோடு குடித்தனம் நடத்த....!!

உங்கள் -'காத்திருப்பு' கவிதை
மலரையும்,வண்ணத்து பூச்சியையும் கொண்டு அருமையாக ஒரு சிலேடை கொடுத்திருக்கிங்க.குறிப்பில் உங்கள் நேசம் உணர்த்தும் விதம் மிக அருமை.

Philosophy Prabhakaran said...

கவிதை வழமைபோல சிறப்பாக இருந்தது...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை அருமை.... வாழ்த்துக்கள்